முக்கிய செய்திகள்

வள்ளலார் வழிபாட்டை புதிய மதமாக அறிவிக்க கோரி மனு..

வள்ளலார் வழிபாட்டை புதிய மதமாக அறிவிக்க கோரிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க முறையின் கொள்கையை ஒரு புதிய மதம் அல்லது தனிநெறியாக அறிவிக்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, மனு குறித்து தமிழக அரசு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.