முக்கிய செய்திகள்

வாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்

வாழ்க்கை

இலக்கை நோக்கிய

ஓட்டந்தானா? எல்லாம்.

நெருக்கடிகள் மட்டுமா?

பிடித்திருக்கின்றன.

ஆசைகள் துரத்துகின்றன

துரத்திக்கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கை கோராதவற்றை

ஆசை கோருகிறது?

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வாழ்கிறோமா?

 

பஞ்சவடி

கடவுளை வணங்கென்றோ

கடவுளை நம்பென்றோ

கடவுள் தருவார் என்றோ

கட்டாயம் கூற மாட்டேன்.

பஞ்சவடி – பஞ்சமுக ஆஞ்சநேயர்

கோயில் படியேரறுங்கள்.

நீங்கள் பார்க்க வேண்டாம் அவரை

அவரே உங்களைப் பார்ப்பார்!

எத்தனை பெரிது

பெரிதினும் பெரிது.

கும்பிட வேண்டாம்

நம்பிட வேண்டாம்.

பாருங்கள்; பார்த்துவிட்டு

வாருங்கள்.

மறையுமா மனம்விட்டு

மறக்க முடியுமா?

Vanambadi Kanavudhasan Poems