பால் இயல் : வானம்பாடி கனவுதாசன்

சின்மயி பாட வாய் திறந்தார்
செவிகள் குளிர்ந்தன
நெஞ்சம் நெக்குருகியது.

சின்மயி பேச வாய் திறந்தார்
செவிகள் தீய்ந்தன
நெஞ்சம் பதறியது.
வாழ்க்கையை விடவும்
வார்த்தைகள் வக்ரப் பட்டன.
கூப்பிட்டார், கூப்பிட்டார்
என்று கூறும்போது
கொச்சைப் பட்டது யார்?

பால் திரிந்து போனது
பகவானுக்குத் தான் வெளிச்சம்.
இயங்கியலா? விலங்கியலா?
எந்த இயல் இது.
இருவருக்கிடையில் ஏதோ நடந்தது?
இருவருக்கிடையில் முடிந்து போனது.
முடிந்து போனதா? தொடர்கிறதா?
எப்படியானால் என்ன?
இதில் நாம் என்ன சொல்ல?
என்ன செய்ய?

தீர்வு யார் கையில்?
தீர்ப்பு யார் கையில்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி…

காணாமல் போன 1500 சிலைகள் மீட்பு,: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்..

Recent Posts