கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்…

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினருடன், அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

21 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.

காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.