பிரதமர் மோடி வாரணாசியில் பிரமாண்டமான பேரணியை மேற்கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி வியாழன் அன்று பிரமாண்டமான பேரணியை கோவில் நகரத்தில் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான காவி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி வாரணாசியில் புதன்கிழமை குடிநீரை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“பிரதமர் மோடி வருவதால் சாலைகளை சுத்தம் செய்ய எங்களுக்கு உத்தரவிடப்பட்டது, அதன்படி நாங்கள் பணிகளை மேற்கொண்டோம்,” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்த பணிக்காக இரவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வழக்கமாக வாரணாசியில் விழாக்காலங்களில் தான் இதுபோன்ற சுத்தம் செய்யும் பணி நடக்கும்.
வாரணாசி சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது. நகரத்தில் 70 சதவித வீடுகள் மட்டும் தான் குழாய் மூலமாக தண்ணீர் இணைப்பை பெற்றுள்ளன. மற்ற வீடுகள் போர் தண்ணீரை நம்பியுள்ளன.
இப்போது சாலையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட நீரால் சுமார் 30 சதவீத மக்கள் தண்ணீரின்றி தவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.