முக்கிய செய்திகள்

வேலைக்காரன் இணையத்தில் வெளியிடுவோம்: தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்..


வேலைக்காரன் தமிழ் படத்தை இன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்து இருப்பதால் படக் குழுவினர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான வேலைக்காரன் தமிழ் படத்தை இணையத்தில் வெளியிட வேண்டாம் என்று இப்படத்தின் இயக்குநர் மோகன்ராஜா கேட்டுக் கொண்டார். வேலைக்காரன் நல்லவன். தாமதமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

அப்படி இருந்தும் இப்படத்தை இன்று மதியம் 1 மணிக்கு இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சந்தானத்தின் சக்க போடு ராஜா படத்தையும் இணையத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியால் வேலைக்காரன் படக்குழு வருத்தத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் பிரபலங்களின் படம் வெளியாகும் போதெல்லாம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.