முக்கிய செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதி : இன்று மனுத் தாக்கல் தொடக்கம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

கடந்த ஏப்ரல் 18ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில்,

ஆகஸ்ட் 5ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 18ந் தேதி வரை நடைபெறுகிறது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்றும்,

தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் நாளையும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுதாக்கல் நடைபெறுவதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.