முக்கிய செய்திகள்

இந்திரா காந்தியின் உதவியாளரும் காங். மூத்த தலைவருமான ஆர்.கே தவான் மறைவு..


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1962-ம் ஆண்டு முதல் அவர் படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டு வரை ஆர்.கே தவான் உதவியாளராக பணியாற்றினார்.

81 வயதான தவான் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்திரா காந்தியின் நெருக்கமான அரசியல் வட்டத்தில் இருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், இன்று அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு காங்கிரஸ் கட்சி தனது இரங்கலை தெரிவித்துள்ளது.