முக்கிய செய்திகள்

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மாயம் : தனிப்படை அமைப்பு..


விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் காவல் நிலையத்தில், நிலுவையிலிருந்த வழக்கு ஒன்றுக்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியாவை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் வீட்டிலிருந்து தொகாடியா மாயமானதால் போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர்.

இந்நிலையில் தொகாடியாவை போலீசார் கைது செய்தததாக கூறி, விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் சோலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆனால் போலீஸ் தரப்பில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசார் தொகாடியாவை கைது செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தொகாடியா காலை 10.30 மணியளவில் வி.எச்.பி., அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் சென்றதாக கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க 4 குழு கொண்ட போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.