முக்கிய செய்திகள்

வி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம்


வி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரதயாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த இந்த ஆட்சி அனுமதி மறுத்தது என அவர் தெரிவித்தார். மேலும் யாரை திருப்திப்படுத்த ரதயாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுக்கப்பட்டது? என்று தினகரன் வினவியுள்ளார்.