முக்கிய செய்திகள்

அஜித்துடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்!

 

விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் தேசிய விருதுபெற்ற பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்க உள்ளார்.

அஜித்தின் இந்தப் புதிய படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் இது.

படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அதில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகிவிட்டதாகவும் மற்றொரு கதாபாத்திரத்துக்கு கன்னட யு டர்ன், விக்ரம் வேதா படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கதாபாத்திரத்துக்கு தேசிய விருது பெற்ற பாலிவுட் புகழ் வித்யா பாலன் நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் வெர்ஷனுக்கு ஏற்றவாறு, திரைக்கதையை இயக்குநர் மாற்றி அமைத்திருப்பதால் வித்யா பாலனுக்கு முக்கிய பங்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது