முக்கிய செய்திகள்

விஸ்வாசத்தை விஞ்சிய சர்க்கார்…!

அஜித்தின் விஸ்வாசம் படத்தை விட விஜய்யின் சர்க்கார் படம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயர் சர்கார் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்ப்படயிருக்கிறது. இதனிடையே, இப்படத்திற்கான தமிழக திரையரங்க உரிமை ரூ.65 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திற்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இதற்கான போட்டியில், கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அறம், குலேபகாவலி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ் விஸ்வாசம் படத்தை அதிக விலைக்கு வாங்கியுள்ளார். 

இதுவரை அஜித் படத்திற்கு இல்லாத தமிழக திரையரங்க உரிமையை ராஜேஷ் ரூ.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது விஜய் படத்தின் திரையரங்க உரிமையை விட குறைவு. எதுவாக இருந்தாலும், அஜித்தை விட விஜய் தான் இதிலும் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay first in Race