முக்கிய செய்திகள்

லண்டனில் விஜய் மல்லையா 3-வது திருமணம்?..


தொழிலதிபர் விஜய் மல்லையா,62 இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடன் பெற்றது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை 2 முறை சம்மன்களை அனுப்பியது. ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய விமான நிறுவனமான கிங் பிஷரில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த பிங்கிலால்வானி என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. லண்டன் நகரில் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே கலந்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.