முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா

நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய் மற்றும் புஜாரா சதமும் கோஹ்லி அரைசதமும் அடித்து அசத்தினர்.  2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளதுடன் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி 54 ரன்களுடனும் புஜாரா 121 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய வீரர் முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் 10-வது சதத்தை பதிவு செய்தார். புஜாரா டெஸ்ட் அரங்கில் 14-வது சதத்தை விளாசியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay, Pujara grind Sri Lanka