முக்கிய செய்திகள்

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்..


மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்கள் கெமிஸ்ட்ரி மிகவும் நல்லா இருப்பதாக ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

மீண்டும் இந்த ஜோடியை படத்தில் எப்போது பார்க்கலாம் என சினிமா பிரியர்கள் காத்துக்கிடந்தனர். அவர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படத்தில் அரவிந்த்சாமி – விஜய் சேதுதி காம்பினேஷனில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சில காட்சிகள் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதனால், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து அவருடன் நடிப்பேன் என்று புன்னைகையுடன் கூறினார்.