தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர்-21-ந்தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.
இதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது. தமிழக அமைச்சர்கள் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இறுதி கட்ட பரப்புரையை விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவு செய்தார்.
இன்று இரவுக்குள் வெளியூர்காரர்கள் ஊரை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர்-24-ந்தேதி நடைபெறவுள்ளது.
அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இரண்டு மாநிலங்களிலும் 21ம் தேதி வாக்குப்பதிவு. 24ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.