முக்கிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : நாடு ழுழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

இந்துகளின் முக்கிய பண்டிகையாகத் திகழும் விநாயக சதுர்த்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடுமுழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில்

பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அனைவரது இல்லங்களிலும் பிள்ளையாருக்கு மோதகம் ,கொழுக்கட்டை, பழங்கள் படைத்து கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையால் பூக்கள்,பழங்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் மற்றும் உலகெங்கும் வாழும் இந்துகள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர்.