முக்கிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்…


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்திபெற்ற கற்பக விநாயகா் ஆலயம் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று காலையில் மூலவருக்கு முன்பு உள்ள கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, தற்பைப் புல் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

வரும் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை தயாரித்து தீர்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது சிறப்பம்சம்மாகும்.