முக்கிய செய்திகள்

அன்புச் செழியனுக்கு ஆதரவாக, அமைச்சர், எம்எல்ஏ யார்வந்தாலும் விடமாட்டோம்: விஷால் விர்…!

அன்புச்செழியனுடன் விஷால்

திரைப்பட தயாரிப்பாளர்களை இனி யாராவது மிரட்டினால் நடப்பதே வேறு என நடிகர் விஷால் ஆவேசத்துடன் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அசோக்குமாரின் மரணம் கந்துவட்டிக்கு எதிரான புரட்சியை வெடிக்கச் செய்துள்ளது. தயாரிப்பாளர்களை இனி யாராவது கந்துவட்டிக்காக மிரட்டி துன்புறுத்தினால், நடப்பதே வேறு. அவர்களுக்காக அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ யார் வந்தாலும் அவர்களையும் விடமாட்டோம். புகார் அளித்து இரண்டு நாட்களாகியும் அன்புச் செழியனைக் தைது செய்யாதது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கொடுமையில் நான் உட்பட பலரும் சிக்கி உள்ளோம். கந்துவட்டிக்கு எதிராக தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் சேர்ந்து போராடுவோம், தனித்தனியாக போராடி துன்பப்பட்டது போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Vishal Dare Anbuchezhiyan And his supporters