முக்கிய செய்திகள்

விஜய்சேதுபதியின் “96“ திரைப்படம் : அக்.4ம் தேதி ரிலீஸ்..

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் முழு காதல் படமாக உருவாகியுள்ள 96 திரைப்படம் வருகிற அக்டோபா் 4ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி டிரெண்டை உருவாக்கியுள்ள விஜய் சேதுபதியும், இளைஞா்கள் மனதில் நீங்கா இடத்திற்கு சொந்த காரராகவும் கருதப்படும் திரிஷாவும் முதல் முறையாக இணைந்துள்ள படம் 96.

இதில் விஜய் சேதுபதி 16 வயது, 36 வயது, 96 வயது என மூன்று தோற்றங்களில் நடித்துள்ளாா்.

இதனை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமாா் இயக்கியுள்ளாா். இயக்குநராக பிரேம் குமாருக்கு இதுவே முதல் படம்.

இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனா்.

இப்படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் மற்றும் டீசருக்கு ரசிகா்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.