முக்கிய செய்திகள்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

விஜயகாந்த் இல்லம் வந்த முதலமைச்சர் பழனிசாமியை, பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் பரவுகின்றன.

இந்த சூழலில், விஜயகாந்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.