முக்கிய செய்திகள்

39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக்  கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் மொசூலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களைப் பெற்று அமிர்தசரஸ், பாட்னா, கொல்கத்தா ஆகிய இடங்களில் அவர்களின் உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஞாயிறன்று மதியம் ஈராக் சென்றுள்ள அவர், இந்தியர்களின் உடல்களுடன் திங்களன்று திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகளால் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VK Singh To Bring Back Bodies Of 39 Indians Killed In Iraq Today