
தமிழர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்காக ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் நோக்கத்தை அழுத்தமான முறையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி என்றும் சுயமரியாதையை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
