முக்கிய செய்திகள்

மழை நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் : ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி..

மழைநீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்; மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி..

நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

2வது முறையாக மோடி மீண்டும் பிரதமரானார். அவருடன் அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்று கொண்டனர். பிரதமரான பின் முதன்முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி இன்று பேசினார்.

இதில், நாட்டின் பல பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த அசாதாரண சூழ்நிலையை சரி செய்ய வேண்டும்.

நமது நாட்டில் மழை நீரானது வருடம் மொத்தத்திலும் 8 சதவீதம் அளவுக்கே சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு துளி மழைநீரையும் சேகரிக்க, கிராம தலைவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன்.

நீரை சேமிக்க, நூற்றாண்டு காலமாக நாம் கடைப்பிடித்த பழங்கால முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நீர் சேமிப்பு பற்றி முக்கிய பிரமுகர்கள் உள்பட வாழ்வின் அனைத்து தரப்பினை சேர்ந்த மக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீர் சேமிப்புக்கான பழங்கால நடைமுறைகளை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த நடைமுறையை மேற்கொள்ளும் ஏதேனும் தனி நபர்கள் அல்லது என்.ஜி.ஓ.க்கள் பற்றி உங்களுக்கு தெரியுமெனில் அவர்களை பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.