முக்கிய செய்திகள்

தமிழகம் புதுச்சேரியி்ல மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில்  4 செ.மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லூரில் தலா 3செ மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் அதிகப்பட்சமாக 36 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.