முக்கிய செய்திகள்

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலையில் கைது…

20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளிமாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசைகிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார். இதனையடுத்து, அனக்காவூர்புதூர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குழந்தைகளை கடத்தியதாக கூறி பொது மக்கள் தாக்கியதில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர்.