வாட்ஸ் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரம்…

வாட்ஸ் அப் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரத்தில், மனித உரிமைகள் குழுக்களை குறிவைத்தே, இத்தகைய தாக்குதலை, முன்னெடுத்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், தமது செயலியில், வாட்ஸ் அப் கால் மூலம் ஊடுருவும் ஹேக்கர்கள்,

கண்காணிப்பு மென்பொருளை பொருத்தி, ஸ்மார்ட்போன்களில் உள்ள தகவல்களை, செயல்பாடுகளை கண்காணிக்க முயற்சிப்பதாக அறிவித்தது.

எனவே, உடனடியாக, வாட்ஸ் அப் செயலியை, அப்டேட் செய்யுமாறு, கோடிக்கணக்கான தனது பயனாளர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கேட்டுக்கொண்டது. குறிப்பிட்ட போன்களை குறிவைத்த ஹேக்கர்களின் திட்டம் என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிலும், மனித உரிமைகள் குழுக்களை குறிவைத்தே, ஹேக்கர்கள், சைபர் கண்காணிப்புத் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என்றும் வாட்ஸ்அப் ஐயம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, ஹேக்கர்களாக, செயல்பட்டவர்களின் பின்னணியில், இஸ்ரேல் நாட்டின் பிரபல சைபர் தொழில்நுட்ப நிறுவனமான என்.எஸ்.ஓ இருக்க கூடும்? என, லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.