வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…

பொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போலியான, பொய்யான செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் கண்டறிய வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.

பொய்யான செய்தி என்பதை சுட்டிக்காட்டிய 24 மணி நேரத்திற்குள் அவற்றை சமூகவலைத்தளங்கள் நீக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.

இதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு ஒன்றை தயாரித்து, வெளியிட்டுள்ள மத்திய அரசு அதன் மீது பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

சமூக வலைத்தள நிறுவனங்கள், அரசு முகமைகள் கேட்ட 72 மணி நேரத்திற்குள் தகவல்களை வழங்க வேண்டும், தகவலை உருவாக்கியவர் யார் என்பதை கண்டறிய வேண்டும்,

சட்டத்திற்கு புறம்பான கன்டன்ட்டுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும், இதற்காக தானியங்கி செயலிகளை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் வரைவில் இடம்பெற்றுள்ளன.

சமூகவலைத்தள நிறுவனங்கள், தேவையான தகவல்களை பாதுகாத்து வைத்திருப்பதற்கான காலஅளவை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தும் பரிந்துரையும் இதில் இடம்பெற்றுள்ளது.