முக்கிய செய்திகள்

குழந்தைகளைக் குறிவைக்கும் இந்த மர்ம நபர் யார்?

 

அடையாளம் தெரியாத ஒரு நபர் குழந்தைகளைக் குறிவைத்து விரட்டிச் சென்று ஊசி போடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி றது.

இந்த வீடியோவில், அடையாளம் தெரியாத நபர் குழந்தைகளிடம் அருகில் சென்று ஊசி போன்ற எதோ ஒன்றை செலுத்துகிறான். இதன் உண்மை தன்மை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.

சேலம் SES பள்ளியின் வெளிப்புறத்தில் ஒரு மர்மஆசாமி சிறுமிகளுக்கு ஏதோ ஊசியை அவர்கள் அனுமதி இல்லாமல் போடும் காட்சி பதிவாகி உள்ளது. இதே போன்ற ஒரு நிகழ்வு சென்னை DAV பள்ளி வளாக CCTVலும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையினையும், ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் அந்த ஆபத்தையும் காவல்துறைதான் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி.. காவல்துறை கையில்…