முக்கிய செய்திகள்

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..


மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் வாழும் பகுதியை ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தி கொண்டுள்ளது. ஆலைக்கு ஆதரவாக சட்டதிட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது தான் தமிழகத்தின் இன்றையே கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது. தூத்துக்குடியில் நடந்த சோகத்தை தமிழகத்தை மறக்காது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு வரை போனது ஏன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே இன்றைய நிலை. இறந்தவர்கள் குடும்பத்தை காக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என அரசு சொன்னால் போதாது. அரசும் அமைதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.