முக்கிய செய்திகள்

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்: வம்பு பேசும் ட்ரம்ப்!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மானியம் வழங்குவது பைத்தியக் கார நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

.அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிதிமூலதனம் தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளரும் நாடுகளையும், அவற்றுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி உலக வர்த்தக அமைப்பையும் கடுமையாக சாடினார்.  மானிய உதவிகளைப் பெறுவதற்காகவே சில நாடுகள், தங்களை வளரும் நாடுகள் என அடையாளப்படுத்திக் கொள்வதும், அதன் அடிப்படையில் அவர்களுக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதும் உலக வர்த்தக அமைப்பின் பைத்தியக் காரத்தனமான நடவடிக்கைகள் என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

பொருளாதார வலிமை மிக்க நாடாக சீனா உருவெடுக்க, உலக வர்த்தக அமைப்பு அனுமதித்து விட்டதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 

மற்ற நாடுகளை விட விரைவாக வளர வேண்டும் என்றால், அமெரிக்கா தன்னையும் வளரும் நாடாகவே கருதிக் கொள்ள வேண்டும் என கூறிய ட்ரம்ப், ஆமாம் நாங்களும் வளரும் நாடுதான் என்று வம்பாக கூறியுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் அந்த நாட்டின் அதிபர் ஒருவர் இவ்வளவு தரக்குறைவாக இதுவரை பேசியதில்லை என மேற்கத்திய ஆங்கில ஊடகங்களே அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளன.

Why would give aids to India, China and other countries: Trump

 ​