மனைவியின் போனை ரகசியமாக கணவன் சோதனை செய்ததால் அதனை குற்றமாக கருதும் சட்டத்தை சவுதி அரேபிய அரசு இயற்றி உள்ளது.
அவ்வாறு மனைவியின் போனை உளவு பார்க்கும் கணவருக்கு, 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும், 1,33,000 அமெரிக்க டாலர் (5 லட்சம் ரியால்ஸ்) வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை காரணம் காட்டி அவர்களுடன் வாதம் அல்லது சண்டையிட்டாலும் இந்த புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் உள்ள 25 வயதிற்கு மேற்பட்டோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இதனால் மனைவியின் சமூக வலைதளத்தை கணவர் பரிசோதிப்பது, பெண்களின் உரிமைக்கு எதிரானது என்றும், அவர்களின் உரிமையை காக்கவே இந்த சட்டம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.