முக்கிய செய்திகள்

அன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் இறந்த தனது மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து அனைவரின் கணவத்தையும் ஈர்த்துள்ளார்.

ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ்-க்கு தாஜ்மகால் எழுப்பி உலகையே அசத்தினார். அதபோல் மறைந்த தன் அன்பு மனைவிக்கு மெழுகுச்சிலை அமைத்து அசத்தியுள்ளார் கர்நாடக தொழிலதிபர் ஒருவர்
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சீனிவாச குப்தா, பிரம்மாண்டமான வீடு கட்டி கிரஹபிரவேஷம் நடத்த விரும்பினார். ஆனால் அவருடைய மனைவி உயிருடன் இல்லை கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் மனம் வருந்திய சீனிவாச குப்தா தனது மனைவியைப் போல மெழுகு சிலை ஒன்றை சோபாவில் அமர்ந்த நிலையில் செய்தார். அச்சு அசலாக தனது மனைவியின் முக சாயலுடன் இருந்த மெழுசிலைக்கு மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை அணிவித்து அதனுடன் அமர்ந்து புகைப்படமெடுத்துக்கொண்டார்.

அவருடைய மனைவியே நேரில் வந்து குடும்பத்துடன் புதுமனை விழாவை கொண்டாடியது போல இருந்தது. சீனிவாச குப்தாவின் 2 மகள்களும் அப்பா அம்மாவை உட்கார வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.