முக்கிய செய்திகள்

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் : பளு துக்குதலில் இந்தியாவிற்கு 3-வது தங்கம்..


ஆஸ்திரேலியா வின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் பளுதுாக்குதல் 77 கிலோ பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார்.பளுத்துாக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு இது 3-வது பதக்கம் ஆகும். தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கம் தமிழகத்தை சேர்ந்தவர்
ஆண்கள் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். இதன் மூலம் பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.

முன்னதாக,பளுதூக்குதலில், 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர். சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெற்றதன் மூலம் இந்தியா, பளுதூக்குதல் பிரிவில் 3-வது தங்கம் வென்றது. இதனை யடுத்து பதக்க பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பதக்கம் வென்ற சதீஷ்சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவராவார். பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.