மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணியை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி..

வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானாவின் அதிரடி ஆட்டத்தால், மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸில் பெண்களுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகின்றன.

பி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த தொடரில் 3போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ள ஆதிக்கம் மிக்க ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி நேற்று மோதியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்மிர்தி மந்தனா மற்றும் தானியா பாட்டியா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

ஆஸ்திரேலியா சார்பில் டால்யா வலேமிக் பந்து வீசினார். 1.5 ஓவரின் ஆஷ்லீக் கார்டனர் வீசிய பந்தில் 2 ரன்களுடன் தானியா பாட்டியா பெவிலியன் திரும்பினார்.

களத்தின் நிதானமாக நின்று, நிலைத்து ஆடிய ஸ்மிர்தி 9 ஃபோர்ஸ், 3 சிக்ஸர்கள் விளாசி 55 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.

அதேபோல இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் டி 20 இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்களை எடுத்தது.

168 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா மகளர் அணி களமிறங்கியது.

தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பெத் மூனி மற்றும் எலீஸ் வில்லானி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 2ஓவர்கள் முடிவில் இந்த கூட்டணி 14 ரன்களை சேர்த்திருந்தது. 4ம் ஓவர் தொடக்கத்தில் தீப்தி ஷர்மா வீசிய பந்தில் எலீஸ் வில்லானி விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19.4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்திய சார்பில் பந்து வீசிய வீராங்கனை அஞ்சலி படேல் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவரை அடுத்து தீப்தி ஷர்மா, ராதா யாதவ் மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

வரும் 23ம் தேதி ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள்
ஆண்டிகுவாவில் தொடங்கவுள்ளன.

 

கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

புதுக்கோட்டை மாவட்டத்தைப் புரட்டி போட்ட கஜா புயல்..

Recent Posts