மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை : இறுதிப்போட்டியில் மேரி கோம்…

மகளிர்  உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம் வட கொரியாவை சேர்ந்த  கிம் ஹயாங் மியை எதிர்கொண்டார். இதில் மேரி கோம் கிம் ஹயாங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே, 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்

“ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு : ஆளுநரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Recent Posts