முக்கிய செய்திகள்

உலக பேட்மிண்டன் தொடர்: காலிறுதிக்கு பிவி. சிந்து, சாய்னா நேவால் முன்னேற்றம்…


சீனாவின் நான்ஜிங்கில் உலக பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் சுங் ஜி யுனை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-10 என மிகச்சுலபமாக கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதித்த்ம் செலுத்திய சிந்து 21-18 என வென்றார்.

முடிவில், இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் சுங் ஜி யுனை 21-10, 21-18 என வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் – தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார்.

இதில் சாய்னா நேவால் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதில் 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா வென்றார்.

காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கரோலின் மரினாவை எதிர்கொள்ள உள்ளார்.