
உலக இரத்ததான விழாவாக ஜூலை 14-ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக ரத்த தான தினமான ஜூலை 14 வெள்ளிக்கிழமை இன்று காரைக்குடியில், காலை ஏழு மணி அளவில் பெரியார் சிலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவி அவர்களும், காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களும் தொடங்கி வைத்து முடில் சிறப்புரையற்றினர்.

இந்நிகழ்ச்சியை தமிழக காவல்துறை ,அழகப்பா பல்கலைக்கழகம் , குளோபஸ் மிஷின் மருத்துவமனை ,6 எக்ஸ் ,காரைக்குடி சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தினர்.

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் குமரேசன் அனைவரையும் வரவேற்று, இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.

சமூக ஆர்வலர் இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் விவேகானந்தன், டாக்டர். ராமசுப்பு, திருஞானம், பிரகாஷ் மணிமாறன் குருதி கொடையாளர்கள் சமூக ஆர்வாளர்கள், NSS அமைப்பை சேர்ந்தவர்கள், நடையாகள் சங்கத்தினர் மற்றும் மாணவ, மாணவியர் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு டைம்ஸ் ஹெல்த் கேர் ஃபவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் . நிகழ்ச்சி முடிவில் . பிளட் டோனர்ஸ் டாட் .காம் என்ற வெப்சைட் தொடங்கப்பட்டது, கலந்து கொண்ட, அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவத்தினர்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்