உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி..

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஆட்டத்தின் இடையில் மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு 187 ரன்களாக குறைக்கப்பட்டது.

இந்த இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.