முக்கிய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன

உலகக்கோப்பை தொடரில், கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் திமுத் கருணரத்னே ((Dimuth Karunaratne)) தலைமையிலான இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களம் இறங்குகிறது.

இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்தது.

கேப்டன் திமுத் தவிர அந்த போட்டியில் மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், பந்துவீச்சாளர்களும் அந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் சொதப்பினர்.

குல்பதின் நைப் ((Gulbadin Naib)) தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை, அந்த அணியும் இத்தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

எனினும் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது-

இன்று மோதும் இரு அணிகளும் அதன் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்போடு களமிறங்க உள்ளன.