உலக கோப்பை கால்பந்து : டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா காலிறுதியிக்கு தகுதி..


உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா – டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா – டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இறுதியில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா அணி பயன்படுத்தவில்லை. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் டென்மார்க் அடித்த முதல் வாய்ப்பை கோலை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கோலையும் டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக் மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.

டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.

டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது