முக்கிய செய்திகள்

உலக கோப்பை கால்பந்து : அரையிறுதியில் இங்கிலாந்து..


பீபா உலகக்கோப்பையின் காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, ஸ்வீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், குரூப் சுற்றுகள் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன.

இந்த நாக் அவுட் சுற்றில், கொலம்பியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் அதேபோல், சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்வீடன் அணியும் காலிறுதிக்கு தகுதி பெற்றது.