முக்கிய செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணி அசத்தல் வெற்றி..

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி வெற்றி பெற்றது.

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.

50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 85 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், வுட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினர். ஜோ ரூட் நிதானமாக விளையாடி 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

47 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

மலிங்கா 4 விக்கெட்டுகளையும், சில்வா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.