உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின், இளையோருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கணை மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார்!
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின், இளையோருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கணை மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார்!!
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில், 17 வயதான மனு பாக்கர் தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி 244.7 புள்ளிகளை பெற்ற அவர், இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மனு பாக்கர்,
ஹீனா சித்துவுக்கு பிறகு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் 2-வது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் மனு பாக்கர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது