முக்கிய செய்திகள்

உலகக் கோப்பையிலும் எதிரொலித்த “ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க” முழக்கம்..

இங்கிலாந்து – இந்தியா இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்ற மைதானத்தில் தமிழ் மற்றும் பெரியாரின் பெருமை எதிரொலித்தது

லண்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்,

“தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க” என்கிற பதாகையுடன் சமூக வலைதளங்களில் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்தவர் நஜ்முதீன். முன்னாள் கவுன்சிலரான இவர்

நேற்று லண்டனில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட்டை நேரில் பார்க்க சென்றிருந்தார்.

அப்போது அவர் மைதானத்தில் தமிழ் வாழ்க’’ பெரியார் வாழ்க’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்திய படி கோஷமிட்டார்.அவருடன் பார்க்க சென்ற ஏனைய இந்திய ரசிகர்களும் அவரோடு சேர்ந்து முழக்கமிட்டனர்.

தற்போது அவர் பதாகை ஏந்திய படி இருந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒலித்த பெரியார் வாழ்க குரல் இந்தியா முழுவதும் ஒலித்தது.

இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கவும் தொடங்கியிருக்கிறது என பெரியார் ஆதரவாளர்கள் பெருமிதத்துடன் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.