உலகின் செல்வந்தர்கள் , சக்தி செல்வாக்கு நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம், கேளிக்கைத்துறை, அரசியல் ,கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு இந்திய பெண்கள் உள்ளனர்.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, கிரன் மசூம்தார் ஷா, ஷோபனா பார்தியா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ரோஷ்னி நாடார் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 51-வது இடத்தில் இருக்கிறார். கிரன் மசூம்தார் ஷா 60 இடத்திலும், சோபனா பார்தியா 88வது இடத்திலும் உள்ளனர்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 94வது இடம் பிடித்தார்.