முக்கிய செய்திகள்

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்..

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான ஜூனியரில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று 4-வது இடத்தில் உள்ளது.

சீனா , தென்கொரியா , ரஷியா ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களை வகிக்கின்றன.