
உலக விபத்து காய(World Trauma Day) தினத்தை முன்னிட்டு காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை சார்பில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டு தோறும் அக்டோபர் 17-ம் தேதி உலக விபத்து காய தினமாக(World Trauma Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாளவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனை சார்பில் விபத்துகளில் உயிரிழப்பை தவிர்க்க உடனடி முதலுதவி செய்வது எப்படி என்பதை காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டப்பட்டது.

இதே போல் அப்பலோ ரீச் மருத்துவமனையில் 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விபத்து முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அப்பலோ ரீச் மருத்துவமனைக் காணிப்பாளர் மருத்துவர் கோகுல கிருஷ்ணன் , டாக்டர் சேகர் , ஹரி ராஜ்குமார், முருகேசன் மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டெக்னீஷியன்ஸ்,ஊழியர்கள் பங்கேற்றனர்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்