முக்கிய செய்திகள்

யூடியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் மூன்றாம் இடம்..

உலகிலேயே யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து உள்ளது. அதிலும், அரசியல், நகைச்சுவை, படங்கள் போன்றவை இளையோர்களின் மத்தியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

இளைய சமுதாயத்தின் மத்தியில் யூடியூப் சேனல்களும் பெருகி வருகின்றன. புதிய புதிய வீடியோக்கள், காமெடி காட்சிகள் போன்றவை யூடியூப்பில் வெளியிட்டு வருவாய் பெறும் நிறுவனங்களும் உண்டு.

பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் நிகழ்கால அரசியலையும், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளையும் யூடியூப் மூலம் இளைய சமுதாயத்துக்கு சென்றடைகிறது.