வரலாறே தேடிச் சென்று தனதாக்கிக் கொண்ட தலைவர்!

வரலாற்றில் சில தலைவர்கள் இடம்பிடிப்பது உண்டு. ஆனால் வரலாறு தானே சென்று ஒருசிலரை தனதாக்கிக்கொள்ளும்.

 

அப்படி வரலாறே தேடிக்சென்று தனதாக்கிக்கொண்ட மனிதர்தான் இவர்.

 

இஸ்ரேல்- பாலஸ்தீனிய பிரச்சினை பற்றி நீங்கள் ஓரளவு அறிந்திருந்தால் உங்களுக்கு இவர் பற்றிய அறிமுகம் தேவையே இல்லை.

 

அரபு தேசங்களின் வரலாற்றில் நன்கு பக்குவப்பட்ட தலைவர்கள் மிக மிக அரிதாகவே தோன்றியிருக்கிறார்கள். அந்த அபூர்வ தலைவர்களில் இந்த நூற்றாண்டில் தோன்றியவர் இவர். எட்டு வயதிலேயே தன் கண் எதிரில் உறவுகளும், சுற்றமும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் கண்டவர் இவர்.

 

தன் சொந்த மக்களால் பல முறை சந்தேகிக்கப்பட்டு பிறகு மீண்டும் மீண்டும் அவர்களால் நேசிக்கப்பட்ட மனிதர் இவர்.

 

வரலாற்றில் முதல்முறையாக ஒரு ஆயுத போராட்ட இயக்கத்தை ஜனநாயக பாதைக்கு அழைத்துவந்தவர்.

 

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி சத்தங்கள் இவரின் முயற்சியால் அவ்வப்போது மௌன விரதம் இருக்கும்.

 

‘என் ஒரு கையில் ஒலிவ மர கிளைகளையும், மறுகையில் துப்பாக்கியோடும் வந்திருக்கிறேன். இரண்டில் நாங்கள் எதைக்கொண்டு போராடுவது என்பதை இந்த உலகம் தீர்மானிக்கட்டும்’ என இவர் ஐநா சபையில் பேசியபோது இதயமில்லா அக்கட்டிடமும் ஒரு நிமிடம் கலங்கியது வரலாறு.

 

ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னர் பல உலக நாடுகள் இவரை ஆதரித்தன. இவர் உயிரோடு இருந்தவரை இந்தியாவும் இவருக்கு தோளோடுதோளாக நின்றது.

 

இவர் உயிருடன் இருக்கும்வரை நமக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார் என மொசாத் அஞ்சியது.

 

இவர் மரணமும் மர்ம முடிச்சுகளுடனே நிகழ்ந்தது.

 

இவரைப்பற்றி தெரிந்துகொள்ள குறைந்தபட்சம் ‘நிலமெல்லாம் ரத்தம்’ படியுங்கள்.

 

மத்திய கிழக்கு ஆசியா இந்த நூற்றாண்டில் கண்டெடுத்த பொக்கிஷமான பெருந்தலைவர் யாசர் அராஃபத் மறைந்த தினம் (11.11.2017) இன்று. (விடுதலை இயக்கத் தலைவரான யாசர் அராபத் கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் மரணமடைந்தார்)

 

Yasser Arafat anniversary

 

– நம்பிக்கை ராஜ் முகநூல் பதிவில் இருந்து

 

 

 

தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..

கட்டலோனியாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி..

Recent Posts